17 வயதில் சைபர் க்ரைம் நிறுவனம் தொடங்கி சாதனை மன்னார்குடி பள்ளி மாணவருக்கு எஸ்.பி பாராட்டு

By செய்திப்பிரிவு

17 வயதில் இணையதள குற்றங் களை தடுக்கும் நிறுவனம் தொடங்கி மன்னார்குடி பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார். இதை அறிந்த திருவாரூர் எஸ்.பி எம்.துரை, அந்த மாணவரை நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி, செல்வி தம்பதியின் மகன் பிரகதீஸ்வரன் (17). மன்னார்குடி தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

2020-ம் ஆண்டு ஏப்ரலில் டார்க் போர்ட் பிரைவேட் லிமிடெட் என்ற சைபர் க்ரைம் கம்பெனி ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இதன் மூலம் பெரிய நிறுவனங்களில் இணையதளங்கள் முடக்கம் செய்யப்படுவதை பாதுகாக்கவும், இணையதளத்தை முடக்குபவர்களை கண்டுபிடிக்கவும் முடியும். இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை அறிந்து ஆய்வு செய்த வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்டு நிறுவனம், 17 வயதில் இத்தகைய நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருவதை பாராட்டி, பிரகதீஸ்வரனுக்கு வேர்ல்ட் எக்சலன்ஸ்சி அவார்டை வழங்கி (அஞ்சல் மூலம்) கவுரவித்துள்ளது.

இதுகுறித்து அறிந்த திருவாரூர் மாவட்ட எஸ்.பி எம்.துரை, மாணவர் பிரகதீஸ்வரனை அண்மையில் மன்னார்குடி காவல் நிலையத்துக்கு நேரில் வரவழைத்து பாராட்டியதுடன், நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மன்னார்குடி டிஎஸ்பி இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீஸார் உட னிருந்தனர்.

இதுகுறித்து பிரகதீஸ்வரன் கூறி யது:

10-ம் வகுப்பு படிக்கும்போது, இணையதளங்களை பாதுகாப்பது மற்றும் ஹேக்கர்ஸ் குறித்த கட்டுரை களைப் படித்ததால், எனக்கு அதில் ஆர்வம் ஏற்பட்டது. இதன்காரணமாக 2020 ஏப்ரல் மாதம் புதிதாக ஒரு நிறுவனம் தொடங்கி, 27 நிறுவனங்களை அணுகி அவர்களது இணையதளங்களை பாதுகாப்பது குறித்து ஆய்வு செய்து சான்றிதழ் பெற்றுள்ளேன். தற்போது எனது நிறுவனத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இதையறிந்து வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்டு என்னை அங்கீகரித்து, விருது வழங்கியுள்ளது. இதற்கு திருவாரூர் எஸ்பி நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சைபர் குற்றங்களை தடுக்கவும் கண்டு பிடிக்கவும் எனது முயற்சிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை கருதுகிறேன் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்