வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் வாடகை பாக்கி வைத்துள்ள 600 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளில் வாடகை பாக்கியாக மட்டும் சுமார் ரூ.14 கோடி அளவுக்கு நிலுவை உள்ளது. இதில், இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து ரூ.3 கோடி அளவுக்கு வாடகை பாக்கி உள்ளது. இவற்றில் 3 மாதத்துக்கு மேலாக வாடகை பாக்கி வைத்துள்ள 600 கடைகளுக்கு 2-வது மண்டல அலுவலர் மதிவாணன், வருவாய் ஆய்வாளர்கள் குமரவேல், ரவிக்குமார் உள்ளிட்டோர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும், வாடகை பாக்கி தொடர்பாக தண்டோரா மூலம் எச்சரித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago