திருப்பூர் மாநகராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரி வசூல் மையங்கள் செயல்படும்

பொதுமக்கள் வசதிக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரி வசூல் மையங்கள்செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

திருப்பூர் மாநகராட்சியை பொறுத்தவரை 60 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி ஆகியவற்றை பொதுமக்கள் உரிய நேரத்தில் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் மார்ச் மாதம் நிதி ஆண்டு நிறைவடைவதையொட்டி, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை பொதுமக்கள் எளிதாக செலுத்தும் வகையில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளிலும் வரி வசூல் மையங்கள் செயல்படஉள்ளன.

மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 4 மண்டல அலுவலகங்கள் மற்றும் வரி வசூல் மையங்களில் பொதுமக்கள் வரியை செலுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் நாள்தோறும் காலை 9 முதல் மாலை 6 மணி வரை வரி செலுத்தலாம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்