திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் மாற்றுத் திறனாளிகள் பதிவு செய்ய இன்று முதல் சிறப்பு முகாம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் ஜனவரி 01, 2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்த மாற்றுத் திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்ய சிறப்பு முகாம், இன்று (ஜன. 23) முதல் 31-ம் தேதி வரை வட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடக்கிறது.

ஆகவே, மாற்றுத் திறனாளிகள் தங்களது ஆதார் அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள், பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படத்துடன் முகாமில் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.

முகாமில் நேரில் பங்கேற்க முடியாத வகையில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தங்கள் விவரங்களை வட்டாட்சியர் அல்லது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் தபால் மூலம் விண்ணப்பித்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண்1950 அல்லது www.nvsp.in என்றஇணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE