விழுப்புரம் அருகே ஏரளுர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டகுடும்பத்தினர் வசித்து வருகின் றனர். கரடிபாக்கம் -எரளுர் சாலை யில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு அதிகாரிகள் நேற்று காலை ஏற்பாடு செய்தனர். தகவலறிந்த அப்பகுதி பொதுமக்களும், பெண் களும் டாஸ்மாக் கடையை முற்று கையிட்டனர். டாஸ்மாக் கடைக்கு வருபவர்களால் பெண்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று கூறினர்.
அங்கு வந்த திருவெண் ணைநல்லூர் போலீஸார், பொது மக்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடையை உடனடியாக மூடாவிட்டால் தொடர்ந்து போரா டுவோம் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார், டாஸ்மாக் மண்டல மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ‘கடை திறக்கப்படாது’ என்று உறுதியளித்தால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago