கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழையால் பாதித்த பயிர்களை ஆட்சியர் ஆய்வு

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிர்களை நேற்று முன்தினம் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆதிவராகநல்லூர் பகுதியில்மழையால் சேதமடைந்த நெற்பயிரினை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் முன்னிலை யில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து புவனகிரி ஊராட்சி ஒன்றியம் அழிச்சிக்குடி, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றி யம் வாழைக்கொல்லை மற்றும்தெற்குவிருதாங்கன், காட்டுமன் னார்கோவில் ஊராட்சி ஒன்றியம் உத்தமசோழகன், திருநாரையூர் ஆகிய பகுதியில் மழையினால் சேதமடைந்த நெற்பயிரினை ஆய்வு செய்தா்ர.

வீரானந்தபுரம் பகுதியில் சேத முற்ற நிலக்கடலை பயிரினையும், குமராட்சி ஊராட்சி ஒன்றியம் நடுத்திட்டு,பிள்ளையார்தாங்கல் ஆகிய பகுதிகளிலும் மழையினால் சேதமுற்ற நெற்பயிரினை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் முன்னி லையில் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காட்டுமன்னார்கோவில் வட்டம்மா.புளியங்குடியிலிருந்து சிதம்ப ரம் வட்டம் வல்லம்படுகை வரைகொள்ளிடம் ஆற்றங்கரை சாலையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் ஆட்சியர் கூறியது:

புயலினால் பயிர்கள் பாதிக்கப் பட்டதை வேளாண் துறையின் மூலம் கணக்கெடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங் கப்பட்டு வருகிறது.தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பயிர் சேதம் ஏற்பட் டுள்ளது. பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியினை வருவாய் துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். கணக்கெடுப்பு பணி முடிந்தபின் சேதங்கள் குறித்த விவரத்தை அரசுக்கு தெரியப்படுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக் கும் நிவாரணம் கிடைக்க வழி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

கடலூர் வேளாண் இணை இயக்குநர் முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார், தோட்டக் கலை துணை இயக்குநர் சுரேஷ்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்