கடலூர் அருகே சூரியசக்தி பம்பு செட்டுகள் அமைக்கும் மானிய திட்டம் குறித்து கலைக்குழு மூலம் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
கடலூர் வட்டாரம் ஒதியடிகுப்பம் கிராமத்தில் முன்னோடி விவசாயி வேல்முருகன் வயலில் கலைக்குழு மூலம் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் தலைமை தாங்கினார். கடலூர் கோட்ட உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) முரளி கலந்து கொண்டு பேசுகையில், 70 சதவீதம் மானியத்தில் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைப்பது குறித்து விளக்கினார். இத்திட்டத்தில் 230 அடி முதல் 490 அடி வரை நீர் இறைக்கும் திறன் உடைய நீர் மூழ்கி மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்கலாம். மேலும் தரை மட்டத்தில் அமைக்கும் பம்பு செட்டுகளையும் அமைக்கலாம் என்று விளக்கிக் கூறப்பட்டது.
வேளாண் அலுவலர் சுகன்யா, உதவி பொறியாளர் அருள், உதவி வேளாண் அலுவலர் சங்கரதாஸ் ஆகியோர் உடனிருந்தனர். இந்த கலைக்குழு நிகழ்ச்சியை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் அழகுமதி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜவேல் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago