வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு பிற அரசு துறை அலுவலர் களைப் போல், ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் வழங்கக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து புதிதாக திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு ஓராண்டு நிறை வடைந்துள்ளது. மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறை களின் அலுவலர்கள் மாவட்டம் வாரியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். அதேபோல், ஆசிரியர்களுக்கும் பணியிட மாறுதல் வழங்கக் கோரி வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அறிவிப்பு வெளியிடப் பட்டது.
இதையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களின் முன்பாக காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டனர். ஆட்சியர் அலுவலகம் வந்தவர்கள், அனைவரும் உரிய விசாரணை நடத்திய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப் பட்டனர்.
இதற்கிடையில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேலூர் மாவட்டத் தலைவர் மணி தலைமையில் ஆசிரியர்கள் சிலர் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களை, ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் கோரிக்கை தொடர்பாக மனு அளிக்க முக்கிய நிர்வாகிகள் 4 பேரை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர். கோரிக்கை தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago