கந்திலி அருகே மர்ம விலங்கு தாக்கியதால் 5 ஆடுகள் நேற்று உயிரிழந்தன. சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவலளித் ததால் வனத்துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொட்டாவூர் அடுத்த அனிகானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெய்சங்கர்(55). இவர், தனது விவசாய நிலத்தையொட்டி வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். கால்நடைகளையும் அவர் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை மேய்ச்சலுக்கு சென்ற 6 ஆடுகளை ஓட்டி வந்து கொட்ட கையில் அடைத்தார். நேற்று அதி காலை ஆட்டுக் கொட்டகைக்கு ஜெய்சங்கர் சென்று பார்த்த போது, 6 ஆடுகளில் 5 ஆடுகள் மர்ம விலங்கு தாக்கியதில் உயிரி ழந்து கிடந்தன. ஆட்டின் உடல் முழுவதும் விலங்கின் நகக்கீறல் கள் காணப்பட்டன. கழுத்துப் பகுதியிலும், வயிற்றுப்பகுதியில் மர்ம விலங் கின் பற்கள் ஆழமாக பதிந் துள்ளதால் ஆட்டின் குடல் வெளியே சரிந்திருந்தது.
ஆட்டுக்கொட்டகைக்கு செல்லும் பாதையில் மர்ம விலங்கின் கால் தடம் இருப்பதை பார்த்த ஜெய்சங்கர் கூச்சலிட்டார். உடனே, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தெரி வித்தனர். மேலும், ஜெய்சங்கரின் ஆட்டுக் கொட்டகையில் நுழைந்து ஆடுகளை வேட்டை யாடியது சிறுத்தை தான் என பொது மக்கள் தெரிவித்தனர். உடனே, திருப்பத்தூர் வனத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
அதன்பேரில், அங்கு சென்ற வனத்துறையினர் கிராம மக்களி டம் விசாரணை நடத்தினர். பிறகு, கால்நடை மருத்துவர்கள் வரவ ழைக்கப்பட்டனர். மர்ம விலங்கால் உயிரிழந்த ஆடுகளின் உடல் உறுப் பில் சிலவற்றை ஆய்வுக்காக மருத்துவர்கள் எடுத்துச்சென்றனர். இதையடுத்து, வனத்துறை யினர் அப்பகுதியில் முகாமிட் டுள்ளனர். இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறதா ? என்பது குறித்தும், கால்நடைகளை வேட்டையாடி வரும் மர்ம விலங்கு எதுவென்று கண்டறிய வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வனத்துறை யினர் கூறும்போது, "பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அனிகாவூர் கிராமத்தில் விசாரணை நடத்தினோம், ஜெய்சங்கர் ஆட்டுக் கொட்டகைக்கு அருகாமை யில் பதிவான கால் தடம் சிறுத்தை உடையதா ? சிறுத்தை தாக்கியதால் தான் ஆடுகள் உயிரிழந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago