ஜன.25-ம் தேதி காலை புரத்தில் சக்தி கணபதி கோயில் குடமுழுக்கு விழா  சக்தி அம்மா தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர் அடுத்த புரத்தில் ரூ.15 கோடி செலவில் 1,700 கிலோ வெள்ளியால் ஆன சக்தி கணபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் குடமுழுக்கு விழா வரும் 25-ம் தேதி காலை நடைபெற உள்ளதாக  சக்தி அம்மா தெரிவித்தார்.

இது தொடர்பாக  சக்தி அம்மா நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘‘கோயி லின் அவசியம் என்னவென்றால் தெய்வீக சக்திகளை இந்த பிரபஞ்சத்தில் இருந்தும், மந்திரங்களில் இருந்தும் கிரகித்து கர்ப்பக்கிரகத்தில் சேமித்து அங்கு வழிபட வரும் பக்தர்களுக்கு அந்த சக்தியை வெளிப்படுத்துவது. கோயிலின் அவசியம் தெரிந்துதான் பல சக்கரவர்த்திகள் தங்களுடைய அரண்மனைகளை விட பெரிய கோயில்களை கட்டினர்.

கடந்த 2000-ம் ஆண்டில் இங்கு நாராயணிக்கு தனி கோயில் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக 2007-ல் புரத்தில் 1,500 கிலோ தங்கத்தால் ஆன கோயில் உருவாக்கப்பட்டது. புரத்தில் உலகின் முதன் முதலாக மகா லட்சுமிக்கு 70 கிலோ தங்கத்தால் ஆன சொர்ணலட்சுமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பக்தர் களே தங்களது கைகளால் மகாலட்சுமி அபிஷேகம் செய்து வருகின்றனர். தொடர்ந்து, நிவாச பெருமாளுக்கு தனி ஆலயம் அமைத்து பூஜைகள் நடந்து வருகின்றன.

அந்த வரிசையில் உலகத்துக்கு மங்களத்தை, சக்தியை அளிக்க சக்தி கணபதிக்காக வேத மந்திரங்களில் வர்ணித்துள்ளபடி வெள்ளை நிறத்தில் சிலை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. ஐந்தரை அடி உயரத்துடன் சுமார் 1,700 கிலோ வெள்ளியால் ஆன சக்தி கணபதி சிலை உருவாகியுள்ளது. ரூ.3.50 கோடி மதிப்பில் 700 டன் கருங்கல்லால் 40 அடி நீளமும், 25 அடி அகலமும், 40 அடி உயர மும் கொண்ட கோயில் அமைக்கப் பட்டுள்ளது. வரும் 25-ம் தேதி காலை 9 மணி முதல் 10.20 மணிக் குள் சக்தி கணபதி கோயில் குட முழுக்கு விழா நடைபெற உள்ளது.

விநாயகருக்கு பிடித்தமானது நெய்வேத்தியம் லட்டு. எனவே, கடந்த 15-ம் தேதியில் இருந்து வரும் 25-ம் தேதி வரை ஒரு லட்சத்து 8 ஆயிரம் நவதானிய லட்டுக்களை கொண்டு சித்தர்கள் விநாயகருக்காக பூஜை செய்த தமிழ் மந்திரங்கள் மூலம் யாகம் நடந்து வருகிறது. வரும் 25-ம் தேதி வேத முறைப்படியாக பூஜை நடைபெறும். இந்த கோயில் திருப்பணி ரூ.15 கோடி செலவில் தொடங்கி முடிக்கப்பட்டுள்ளது’’ என்றார். அப்போது, புரம் பொற்கோயில் இயக்குநர் சுரேஷ் உடனிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்