நீலகிரியில் 1,087 பேருக்கு கரோனா தடுப்பூசி

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் 1,087 பேருக்கு கரோனோ தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

மாவட்டத்தில் உள்ள 3 கரோனா தடுப்பூசி மையங்களில் 1,087 முன்களப் பணியாளா்கள், மருத்துவா்கள் மற்றும் செவிலியா் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசின் அறிவுறுத்தலின்படி தடுப்பூசி போடப்பட்ட நபா்கள்அரை மணி நேரம் கண்காணிப்பில் வைத்து திருப்பி அனுப்பிவைக்கப்படுகின்றனா்.

இதுவரையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிமாவட்டத்துக்குள் வருபவா்களுக்கான இ-பதிவு நடைமுறை தொடா்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது.இதேபோல, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்துவருவதால் பரிசோதனைகளும் குறைக்கப்பட்டுள்ளன.

பறவைக் காய்ச்சலால் நீலகிரி மாவட்டத்தில் எத்தகைய பாதிப்பும்ஏற்படவில்லை. இருப்பினும் மாவட்ட எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 8 சோதனைச் சாவடிகளிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்