தீயணைப்புத் துறையினரை அழைக்க புதிய செயலி

By செய்திப்பிரிவு

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ‘தீ’ (Thee) செல்போன் செயலி விருதுநகரில் அறிமுகம் செய்யப்பட்டது.

தீ விபத்து நிகழ்ந்த இடத்தை எளிதில் சென்றடைய வசதியாக தமிழ்நாடு தீயணைப்புத் துறை சார்பில் தீ என்ற பெயரில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் இச்செயலியை மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் கணேசன் அறிமுகப்படுத்தினார். அவர் கூறுகையில், தற்போது தீ விபத்து நடந்த இடத்துக்கு விரைவாக செல்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு தீயணைப்புத் துறை சார்பில் ‘தீ’ (Thee) என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஆண்ட்ராய்டு செல்போன் வைத்துள்ள அனைவரும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தீவிபத்து அல்லது இதர இடர்பாடுகள் வரும்போது தகவல் தெரிவிக்க இதில் உள்ள உதவி (Help) என்ற குறியீட்டை அழுத்தினால்போதும், சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை தீயணைப்பு நிலையத்திலிருந்து உடனடியாக தொடர்பு கொள்வார்கள். என்ன பிரச்சினை என்பதை கேட்டறிந்த பின்பு, தேவையான உபகரணங்களுடன் மிக விரைவாக தீயணைப்பு நிலைய வீரர்கள் வருவார்கள் என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்