மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் ஸ்டாலின் தவறான கருத்துகளை கூறுகிறார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் ஸ்டாலின் தவறான கருத்துகளைக் கூறி வருவதாக, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வழியில் உள்ள நிலங்களை கையப்படுத்தும் பணியில், கே.பி.முனுசாமியின் எஸ்டேட் நிலம் உள்ளதால் அந்த திட்டத்தை தடைசெய்து வைத்துள்ளார் என பொதுமக்கள் கூறியதாக தெரிவித்துஉள்ளார்.

கால்வாய் வரும் இடத்துக்கும் என்னுடைய இடத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவர் சொன்னதை நிரூபித்தால், மனதார அரசியல் வாழ்வில் இருந்தே ஒதுங்கி விடுகிறேன். தமிழகம் முழுவதும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டி இது போன்ற தவறாக கருத்துக்களைக் கூறி வருகிறார். மக்கள் ஏமாறமாட்டார்கள்.

முதல்வர் பழனிசாமி டெல்லி சென்று வந்த பின்னர்தான் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளனர். சமூக வளைதளங்கள் என்ற பேரில் அரசியல் தலைவர்களை சிறுமைப்படுத்துவது வாடிக்கையாக போய்விட்டது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வரட்டும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட நாள் வாழட்டும். அவர் குடும்பத்திற்கு அவர் சேவை செய்யட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்