தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி தஞ்சாவூர், அரி யலூர் மாவட்டங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர் மழையால் பாதிக்கப் பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் ரயில டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் ஆர்ப்பாட் டத்தை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் புதுக்கோட்டை ஏ.ராமையன், திரு வாரூர் எஸ்.தம்புசாமி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயக் கடன் களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பயிர்க் காப்பீட்டுக்கு முழு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் இடிந்த வீடுகள் மற்றும் கால்நடைகள், மனித உயிரிழப்புகள் குறித்து முறையாக கணக்கெடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதேபோல, மழையால் பாதிக் கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் அனைத்துக் கட்சி, இயக்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்பாளர் பாலகுரு, ஒன்றிய அமைப்பாளர் கேசவன், திருவள்ளுவர் விவசாயிகள் சங்கம் கலைமணி மற்றும் திமுக, பாமக, காங்கிரஸ், அமமுக கட்சிகளின் நிர்வாகிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில்...
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத் தில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் ரா.உலகநாதன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் ராமநாதன், ஒன்றியச் செயலாளர் அபிமன்னன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago