உயர்மின் கோபுரம் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

By செய்திப்பிரிவு

உயர்மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி திருப்பூர் அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்புசங்கத்தின் சார்பில் உயர்மின் கோபுரம் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் காங்கயம் படியூரில் நேற்று காலை தொடங்கியது. சங்கத்தின் செயலாளர் முத்து விஸ்வநாதன் தலைமைவகித்தார். நிறுவனர் ஈசன், தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். கொமதேக மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முதல் நாள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில், உயர்மின் வழித்தட திட்டத்தை சாலை ஓரமாக புதைவடமாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திட்டம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான இழப்பீடு வழங்க வேண்டும்.

அனைத்து உயர்மின் கோபுரம் திட்டங்களுக்கும் மாத வாடகை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். தமிழக அரசு குறைந்தபட்ச இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விவசாயிகள் கூறும்போது, “கோரிக்கைகளை வலியுறுத்திதிருப்பூர் தவிர, உசிலம்பட்டி,திண்டுக்கல் கள்ளிமந்தையம் பகுதிகளிலும் காத்திருப்பு போராட் டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. எங்களது கோரிக்கைகள் நிறை வேறும் வரை போராட்டம் தொடரும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்