வெள்ளகோவில் பிஏபி கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி, காங்கயத்தில் 2-ம் நாளாக விவசாயிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கயம்- கோவை சாலையில்உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம்முன்பு நடந்துவரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு, காங்கயம்-வெள்ளகோவில் நீர் பாதுகாப் புக்குழுவினர் மற்றும் அப்பகு தியை சேர்ந்த விவசாயிகள் பெருந்திரளாக பங்கேற்றுள்ளனர்.
“வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் வரவேண்டிய தண்ணீரை பிஏபி நிர்வாகம் முறைகேடாகப் பயன்படுத்தி, பல ஆண்டுகளாக விவசாயிகளை வஞ்சிக்கிறது. தண்ணீர் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கடைமடைப் பகுதிகளுக்கு உரிய தண்ணீரை முறையாக வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விவசாயிகள் தெரிவித்தனர். போராட்டத்தில்வெள்ளகோவில், காங்கயம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன், போராட்டத்துக்கு நேற்று ஆதரவு தெரிவித்து விவசாயிகளிடம் பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “விவசாயிகள் அரசாணைப்படி தண்ணீர் கேட்டுள்ளனர்.
பிஏபி கடை மடை பகுதி என்பதால், தண்ணீர் கிடைத்தால் தான், விவசாயிகள் பயன் பெறுவார்கள். தற்போது தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அவர்களது போராட்டத்தின் நோக்கம் வெற்றிபெறவும், இரவு நேரங்களில் விவசாயிகள் கடும் குளிரில் தங்குவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago