திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளைக் கண்காணிக்க தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார் என கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:
திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை கடந்த 2008-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. சாலை விரிவாக்கப் பணிகள் 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒப்பந்தம் எடுத்தவர்களுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டன. மத்திய அரசு மாற்றத்தால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதையடுத்து குண்டும், குழியுமான இச்சாலையில் மக்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுடன் சென்று வருகின்றனர். மேலும் விபத்துகளில் உயிரிழப்புகளும், உடல் உறுப்பு இழப்பும் ஏற்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குப் பின்னர் தொடர்புடைய மத்திய அமைச்சர், உயர் அலுவலர்கள் சந்தித்து பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டேன். அதன் பயனாக கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.434 கோடிக்கு சாலை பணிகள் மேற் கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டது. ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் மழை உள்ளிட்ட காரணங்களைக் கூறி காலதாமதம் செய்து வந்ததால், மீண்டும் ஒப்பந்தத் தொகை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரை சாலை விரிவாக்கப்பணியை, கிருஷ்ணகிரி யில் இருந்து தொடங்க வேண்டும். ஒப்பந்தத்தை 2-ஆக பிரித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். இதில், கிருஷ்ணகிரியில் இருந்து சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர் முன் வந்தார். அதன்படி பணிகள் தொடங்கப்பட்டன.
கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பணிகள் மிகவும் தொய் வாக மேற்கொள்ளப்பட்டது. கடந்த 6-ம் தேதி டெல்லியில் அலுவலர்களை மீண்டும் சந்தித்து ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். பின்னர் அலுவலர்கள் வருகிற மார்ச் 31-ம் தேதிக்குள் ரூ.80கோடிக்கு சாலை பணிகள் முடித்திருக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனவும் ஒப்பந்ததாரருக்கு எழுத்துபூர் வமாக கடிதம் அளித்துள்ளனர். மேலும், சாலை பணிகளை கண்காணிக்க தனி அலு வலர் ஒருவரை நியமித்துஉள்ளனர். இவ்வாறு எம்பி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago