திருப்பத்தூரில் 42 குடும்பத்தினருக்கு வீட்டு மனை பட்டா அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

By செய்திப்பிரிவு

ஏரி புறம்போக்கு இடத்தில் வசித்து வந்த 42 குடும்பத்தினருக்கு மாற்று இடத்தில் வசிப்பதற்கான வீட்டு மனை பட்டாவை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜம்மனப் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கவுண்டன் ஏரிக்கு உட்பட்ட புறம்போக்கு இடத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறைகளாக வசித்து வந்தனர். ஏரி புறம்போக்கு பகுதி என்பதால் சமீபத்தில் அவர்களை அப்புறப் படுத்த வருவாய்த்துறை யினர் நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால், பல ஆண்டுகளாக வசிக்கும் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் கோரிக்கை மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து, ஏரி புறம்போக்கு பகுதியில் வசித்து வந்த 42 குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அருகேயுள்ள ஏ.கே.மோட்டூரில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதற்கான வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 42 குடும்பத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்