நீட் தேர்வை நீக்க வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கை விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் நேற்று முன்தினம் இரவு எம் ஜி ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் சி. வி. சண்முகம் பேசி யது:

எதிர்க்கட்சியினர் கூட எம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட் சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று நாங்கள் மக்களிடத்தில் வாக்குகேட்டு வருவோம். கருணாநிதி ஆட்சியை கொண்டு வரு வோம் என்று மக்களிடம் சென்று வாக்குகேட்க ஸ்டாலினுக்கு தைரி யம் இருக்கிறதா? மே மாதத்திற்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது.

நீட் தேர்வை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார்.நீட் தேர்வை நீக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கொள்கை. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டு வந்தோம்.

ஆளுநரின் ஒப்புதல் இல் லாமல் இதற்கான சட்டத்தை நிறை வேற்றியவர் முதல்வர் பழனி சாமி. நீட் தேர்வை எடுக்கும் வரைதான் இந்த சட்டம் இருக்கும் என்று பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்