சிறுமியை கடத்திச் சென்று பாலி யல் வன்கொடுமை செய்த இளை ஞருக்கு 20 ஆண்டு சிறைதண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விருத்தாசலம் வட்டம் பூதா மூரைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் செல்வக்குமார் (29). டிராக்டர் ஓட்டுநர். இவர், 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடந்த 13.09.2019-ல் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே கடத்தி சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நீதிபதி எழிலரசி இவ்வழக்கில், செல்வக்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்ப ளித்தார்.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு மூலம் ரூ. 3 லட்சம் 30 நாட்களுக்குள் வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவ்வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கலாசெல்வி ஆஜரா னார்.
இதனை தொடர்ந்து செல் வக்குமாரை போலீஸார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago