குறிஞ்சிப்பாடி பகுதிகளில் கன மழையினால் பாதிக்கப்பட்ட நெற் பயிரினை மாவட்ட ஆட்சியர் பார் வையிட்டு ஆய்வு செய்தார்.
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன் றியம் பூவாணிக்குப்பம் பகுதியில் மழையினால் சேதமடைந்த நெற்பயிரினை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வுசெய்தார். தொடர்ந்து அயன்குறிஞ்சிப்பாடி பகுதியில் பாதிக்கப்பட் டுள்ள நெற்பயிரினை பார்வையிட் டார். பாதிப்புகள் குறித்து விவசாயி களிடம் கேட்டறிந்தார். அப்பகுதி விவசாயிகள், தாழவாய்க்காலை கடந்து செல்ல பாலம் அமைத்து தர வேண்டி ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரி வித்தார்.
தொடர்ந்து கல்குணம் பகுதியில் சேதமடைந்த நெற்பயிரினை பார்வையிட்டார். இதுகுறித்து ஆட்சி யர் கூறியது:
புயலினால் ஏற்பட்ட சேதங்க ளுக்கு கணக்கெடுக்கப்பட்டு நிவார ணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கனமழையினால் பாதிக்கப் பட்டுள்ள விவசாய நிலங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுக்கும் பணிநிறைவடைந்த பின்பு அரசுக்கு தெரிவித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்று தெரிவித்தார்.
கடலூர் வேளாண் இணைஇயக்குநர் முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் தமிழ்ச் செல்வி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago