அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் எதுவும் நடைபெறவில்லை என்று திமுக துணைப்பொதுச்செயலாளர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நீட் தேர்வு ரத்து செய்யப்பட் டாலும், அரசுப் பள்ளி மாணவர் களுக்கான 7.5 சதவீத இட ஒதுக் கீடு சட்டம் தொடரும். இது கூட தெரியாமல் சி.வி. சண்முகம் சட்டஅமைச்சராக உள்ளார். நுழைவுத் தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப் பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும்.
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு, பொள்ளாச்சியில் பெண் களுக்கு எதிரான நிகழ்வுகள் என அனைத்தையும் மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.
திமுக ஆட்சி குடும்ப ஆட்சி என்கிறார்கள். ஜெயக்குமார், ஓ. பன்னீர்செல்வம் மகன்கள் வந்துள் ளனர். இது வாரிசு இல்லையா? வாரிசுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. உதயநிதி மிக சிறந்த பேச்சாளராக இருப்பது பிடிக்காமல், அவர் மீது வழக்கு தொடர்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் எவ்வித நலப் பணிகளும் நடைபெறவில்லை. பாதாள சாக்கடை திட்டம், புதிய பேருந்து நிலையத்தில் தேங்கும் நீர் வெளியேற்றப்படவில்லை. கோட்டக்குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட வில்லை.
மரக்காணத்தில் மீன்பிடி துறை முகம் அமைக்கப்படவில்லை. மொத்தத்தில் இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.
மாவட்ட திமுக செயலாளர் புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் ஜெயசந்திரன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.
கோட்டக்குப்பத்தில் தூண்டில் வளைவு, மரக்காணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago