தேனி, மதுரை மாவட்டங்களில் இன்று நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.
திமுக. தலைவர் முக.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் மக்கள் கிராம சபைக் கூட்டம் மூலம் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். இதன்படி நேற்று மாலை விராலிமலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் திண்டுக்கல் வழியாக நேற்றிரவு தேனி வந்தார். முன்ன தாக, தேனி மாவட்ட எல்லையில் அவருக்கு மேளதாளம் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது.
தேனி தெற்கு, வடக்கு மாவட்டச் செயலாளர்கள் கம்பம் என்.ராமகிருஷ்ணன், தங்கதமிழ்ச்செல்வன், மதுரை மாவட்டச் செயலாளர்கள் மூர்த்தி எம்எல்ஏ, மணிமாறன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்பு தேனி பழனிசெட்டிபட்டி யில் உள்ள விடுதியில் தங்கினார்.
இன்று (புதன்) காலை 10 மணி அளவில் தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூரில் நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறுவதுடன், அதிமுகவை நிராகரிப்போம் என்ற துண்டுப் பிரசுரங்களை வழங்கி மக்களிடம் குறைகளைக் கேட்க உள்ளார்.
நிகழ்ச்சி முடிந்ததும் மதுரை மாவட்டம் செக்கானூரணியில் நடைபெறும் கூட்டத்துக்குச் செல்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் உதயகுமாரின் தொகுதிகளை மையப்படுத்தி இவரது பயணம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி முடிந்ததும் மதுரையில் இருந்து இரவு 7 மணிக்கு விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago