கிருஷ்ணகிரி கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள எழுத்தர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கம் மற்றும் நகர கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள எழுத்தர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடந்தது. இதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் கரோனா காரணமாக எழுத்துத் தேர்வு நடக்கவில்லை. நேர்முகத் தேர்வை நடத்தி ஆட்களை தேர்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது. அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நேர் முகத் தேர்வில் பங்கேற்றவர்கள் எந்தெந்த இடங்களில் அமர வேண்டும் என்பதை மண்டல இணைப் பதிவாளர் சந்தானம், குலுக்கல் முறையில் தேர்ந் தெடுத்து தொடங்கி வைத்தார்.
இதில், துணைப் பதிவாளர்கள் ராதாகிருஷ்ணன், சரவணன், ராஜதுரை, சம்பத்குமார், சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர். 57 காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் 115 பேர் கலந்து கொண்டனர். இதில், சான்றிதழ் சரி பார்ப்பு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடைபெற்றன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago