கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. ஜன.28-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
நேற்று அதிகாலை 5 மணிக்குநடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை நடந்தது. கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 8 மணிக்கு திருவிழா கொடியேற்றி மகா தீபாராதனை நடந்தது.
கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானைக்கும், சோமாஸ்கந்தர், அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று இரவு கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் பூச்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். விழா நாட்களில் பூதவாகனம், அன்னம், வெள்ளியானை, வெள்ளி மயில், காளை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
ஜன.25-ம் தேதி மாலை 4 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி பூஜையும், இரவு 8 மணிக்கு வெள்ளிசப்பரத்தில் சிவப்பு சார்த்தியும், தொடர்ந்து வெள்ளை சார்த்தியும் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 26-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு பச்சை சார்த்தி சுவாமி கிரிவலமாக உலா வருகிறார்.
வரும் 28-ம் தேதி காலை 6 மணிக்கு சுவாமி சட்ட ரதத்திலும், விநாயகப் பெருமாள் கோர தத்திலும் எழுந்தருள்கின்றனர். காலை 9 மணிக்கு மேல் தைப்பூச தேரோட்டம் நடக்கிறது.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயில் தைத்திருவிழா நேற்றுகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலையில் விநாயகர், பூதநாதர், அம்பாளுக்குசிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் அன்புமணி மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.விழாவை முன்னிட்டு இரவில்பூதலிங்க சுவாமி, அம்பாள் பூக்கோயில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்வு நடைபெற்றது.
2-ம் நாள் திருவிழாவான இன்றுகாலை 7 மணிக்கு வாகன பவனி,அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், சுவாமியும், அம்பாளும் கற்பக விருட்ச வாகனத்தில் பவனி வருதல் நடை பெறுகிறது.
9-ம் நாள் விழாவான வரும் 27-ம் தேதி காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. தேரில் விநாயகர், பூதலிங்க சுவாமி, அம்பாள் எழுந்தருளுகின்றனர்.
10-ம் நாள் விழாவான 28-ம்தேதி காலை 8 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
திருநெல்வேலி
திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடி யேற்றத்துடன் நேற்று தொடங்கியது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், கொடிமரத்துக்கு தீபாராதனையும் நடைபெற்றது. திருவிழாவில் வரும் 28-ம் தேதி தைப்பூச தீர்த்தவாரி திருவிழா கைலாசபுரம் தீர்த்தவாரி மண்டபத்தில் நடைபெறுகிறது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago