திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்த ஆரம்ப கட்ட கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித்தார்.
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணியை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் உயிர் சேதங்களும், பாதிப்புகளும் பெரிய அளவுக்குஇல்லை. வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்த ஆரம்பக்கட்டகணக்கெடுப்பு பணிகள் நிறைவுபெற்றுள் ளன. வெள்ளம் முழுமையாக வடிந்தபின்னர் இறுதிக்கட்ட கணக்கீட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் இன்று தொடங்கி 10 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது. தற்போது ஏற்பட்ட வெள்ளம் நமக்கு ஒருபாடத்தை கற்றுத்தந்துள்து. அதன்மூலம் நீர்மேலாண்மையில் மேலும் அதிகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் வகுப்பறைகளை தூய்மை யாக வைத்திருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
32-வது சாலை பாதுகாப்பு அடுத்த மாதம் 17-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் விபத்தில்லா சாலை பயணம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
பேரணி தொடக்க நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் மேகஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago