276 முன்கள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக 276 முன்கள பணியாளர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட 322 மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உட்பட முன்கள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போட முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக,14,400 டோஸ்கள் வரவழைக்கப் பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட் டுள்ளன. இதையடுத்து, கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16-ம் தேதி தொடங்கியது. 6 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில் போளூர் அரசு மருத்துவமனை மற்றும் கொம்மநந்தல் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று பார்வையிட்டார். அப்போது, அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்கள பணியாளர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 276 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்