கடந்த 1949-ம் ஆண்டு கடைசி பிரிட்டிஷ் கமாண்டரிடமிருந்து, ராணுவதளபதி பொறுப்பை மறைந்த பீல்டுமார்ஷல் ஜெனரல் கரியப்பா ஏற்றுக் கொண்டார். இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜன.15-ம் தேதி ராணுவ தினமாக கொண் டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் நபர்களுக்கு மெச்சத்தக்க பணிக்கான ராணுவ தின விருது வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மெச்சத்தக்க வகையில் மேற்கொண்ட பாதுகாப்பு அதிகாரி கர்னல் கே.கார்த்திகேஷ், ராணுவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த 15-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. நாடு முழுவதும் அதிகாரிகள் பிரிவில் விருது பெற்ற 80 பேரில், தமிழகத்திலிருந்து விருது பெற்ற ஒரே அதிகாரி கார்த்திகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை சவுரிபாளையத்தைச் சேர்ந்த இவர், தனது 19 ஆண்டுகால பணிக்காலத்தில் பெற்றுள்ள 4-வது ராணுவ விருது இதுவாகும். 2009-ல் மணிப்பூர் மாநிலத்தில் பயங்கார எதிர்ப்புக் குழுவில் சிறப்பாக பணிபுரிந்ததற்கான துணிச்சல் மிகு விருதும் பெற்றுள்ளார்.
விருது பெற்ற கர்னல் கே.கார்த்திகேஷை திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பொதுமேலாளர் ஷிரீஸ்கரே பாராட்டினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago