விழுப்புரம் அருகே தடுப்பணை யில் மூழ்கிய இளைஞர் உடல் மீட்கப்பட்டது.
விழுப்புரம் அருகே சித்தனாங் கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர் மகன் விநோத்குமார் (22). இவர் கடந்த சனிக்கிழமை தென்பெண்ணையாற்றில் நண்பர்களோடு குளித்தார். அப்போது, தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்டு தடுப்பணையின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டார்.
இத்தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபீன் காஸ்ட்ரோ தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருந்ததால் தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. ஆற்றில் வரும் தண்ணீரை வேறு பகுதிக்கு மாற்றிவிடப்பட்டு தேடுதல் பணி தொடர்ந்தது.
நேற்று முன் தினம் அப்பகுதிக்கு சென்ற திமுக மாநில துணைப்பொதுச் செயலாளர் பொன்முடி, மாவட்ட செயலாளர் புகழேந்தி தண்ணீரில் மூழ்கிய விநோத்குமாரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.
தடுப்பணையில் விநோத் குமாரின் உடல் சிக்கிய இடம் நேற்று கண்டறியப்பட்டது. அங்குபொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு உடல் மீட்கப் பட்டது. இப்பணிகளை ஆட்சியர்அண்ணாதுரை, எஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago