விழுப்புரம் மாவட்டத்தில் 120அரசு டாஸ்மாக் கடைகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 102 டாஸ்மாக் கடைகள் என ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 222 டாஸ்மாக் கடைகள் மற்றும் 9 அரசு மதுபான கூடங்கள் உள்ளன.
இந்த கடைகளில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி வரை மது விற்பனை நடைபெறுவது வழக்கம். விழுப்புரம் மாவட்டத்தின் அருகிலேயே புதுச்சேரி மாநிலம்இருப்பதாலும் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனை போன்றவற்றை தாண்டியும் விழுப்புரம் மாவட்டம் டாஸ்மாக் விற்பனையில் முன்னிலையில் உள்ளது.
தீபாவளி பண்டிகை, புத்தாண்டு, பொங்கல் விழா போன்றபண்டிகை நாட்களில் வழக்கத்தைவிட மதுபானங்கள் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் பொங்கல் விழாவையொட்டி கடந்த 13-ம்தேதி ரூ.5 கோடியே 49 லட்சத்து 46 ஆயிரத்து 50-க்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளது. இதேபோல் பொங்கல் பண்டிகையான 14-ம் தேதி ரூ.8 கோடியே 95 லட்சத்து 95 ஆயிரத்து 900-க்கு மது வகைகள் விற்பனையானது. 15-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் மறுநாளான 16ம் தேதி காணும் பொங்கலன்று ரூ.9 கோடியே 51 லட்சத்து 59 ஆயிரத்து 910-க்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளது. மொத்தத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாட்களில் ரூ. 23 கோடியே 97 லட்சத்து ஆயிரத்து 860 க்கு விற்பனையாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago