புவனகிரி அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் 2 முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேருக்கு கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
புவனகிரி அருகே உள்ள அழிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி(67). ஊர் தலைவராக இருந்தார். இவரது தம்பிமகன் ரவிச்சந்திரன்(30). இருவரும்கடந்த 8.5.2005-ல் அதே பகுதியில் கொலை செய்யப்பட்டனர்.இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கடலூர் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். கோயில் திருவிழா உட்பட பல்வேறு பிரச்சினைகளில் முன்விரோதம் காரணமாக இருவரையும் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர்கள் பன்னீர்செல்வம்(59), நடராஜன்(55) மற்றும் அன் பழகன்(64), ராகவன்(52) ஆகி யோரை கடலூர் சிபிசிஐடி இன்ஸ் பெக்டர் தீபா மற்றும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன்திலகவதி இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார். பன்னீர்செல்வம், அன்பழகன், நடராஜன், ராகவன் ஆகியநான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும், பன்னீர்செல்வத்திற்கு ரூ. 1,500, அன்பழகன், ராகவ னுக்கு தலா ரூ.1,700, நடராஜ னுக்கு ரூ.2,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.சந்திரசேகர் ஆஜரானார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago