சிவகங்கை அருகே கண்டிப்பட்டி யில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 600 காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் 80 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை அருகே கண்டிப் பட்டியில் அந்தோணியார் திருவிழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது.
கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளையை லாவகமாக மடக்கிய இளைஞர். மஞ்சுவிரட்டைக் காண வந்த வெளியூரைச் சேர்ந்தோரை கிராம மக்கள் வரவேற்று உண வளித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்துக்கு வந்தவர்கள் பசியோடு செல்லக் கூடாது என்பதற்காக விருந்தளிக்கும் பழக்கத்தை பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறோம் என்று கூறினர்.
மஞ்சுவிரட்டையொட்டி கோயில் காளைக்கும், தொழுவில் இருந்த காளைகளுக்கும் மரியாதை செய்தனர். அதன்பின் பகல் 2.30 மணியளவில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மொத்தம் 90 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 75 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர் களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அமைச்சர் ஜி.பாஸ்கரன், ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உள்ளிட்டோர் மஞ்சுவிரட்டை பார்த்தனர்.
முன்னதாக கண்மாய் பொட்டல், புன்செய் நில பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுகள் முட்டியதில் 80 பேர் காயமடைந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago