ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இரண்டு நாட்களுக்கு வகுப்புகளை நடத் தாமல் மாணவர்களின் மன நிலையை சமன்படுத்த ஆலோ சனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கால் தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. தொடர் ஊரடங்கு மற்றும் கரோனா பரவல் அச்சத்தால் 2019-20ஆம் கல்வியாண்டு நிறைவு பெற்றது. தொடர்ந்து, 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளிகளில் வகுப்புகள் தொடங்காமல் ‘ஆன்லைன்’ மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில், கரோனா பரவல் எண்ணிக்கை குறைந்து வருவதால் அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் வகுப்புகள் தொடங்கவுள்ளன.
பள்ளிகள் திறப்பது குறித்து சமீபத்தில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், பள்ளிகளை திறப்பதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங் களிலும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பள்ளிகளை தூய்மைப்படுத்தி தேவையான முன்னேற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் 258, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 216, திருப்பத்தூர் மாவட்டத்தில் 226 என மொத்தம் 700 பள்ளிகளை திறக்கவுள்ளனர். கரோனா விதிகளை பின்பற்றி பள்ளிகள் செயல்படுவதை கண்காணிக்க தேவையான நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘அனைத்து பள்ளிகளுக்கும் தெர்மல் ஸ்கேனர், ஆக்ஸி பல்ஸ் மீட்டர்,போதுமான அளவுக்கு சானிடை சர் வழங்கப்பட்டுள்ளன. குறைக் கப்பட்ட பாடங்களின் விவரங்கள் பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள் ளன. அது குறித்து மாணவர் களுக்கும் தெரிவித்து மாணவர்கள் மத்தியில் தேவையில்லாத பதட்டத்தை தணிக்க வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்புகள் நடத்த வேண்டும் என்பதால் வகுப்புகளுக்கான நேரத்தையும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிர்ணயித் துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள் ளது. பள்ளி தொடங்குவது முதல் பள்ளி விடும் நேரம் வரை முறை யாக கரோனா விதிகளை பின்பற்ற வேண்டும். பள்ளி தொடங்கும் முதல் இரண்டு நாட்களுக்கு வகுப்புகள் எதுவும் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தத்தை ஏற்படுத்தாமல் இருக்க தேர்வு குறித்த பயமும், கரோனா அச்சம் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்படும்.
மாணவர்கள் அரசுப் பேருந்து களில் வராமல் மிதிவண்டிகளில் வரும்படியும் அறிவுரை வழங்கப் பட்டுள்ளது. அனைவரும் கட்டாயம் தண்ணீர் பாட்டிலை எடுத்து வர வேண்டும். மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து செல்லக்கூடாது. வகுப்பில் ஒரு பாடப்பிரிவு முடிந்ததும் அடுத்த பாடப்பிரிவுக்கான ஆசிரியர் வருவது தாமதமானால், அங்கு வேறு ஒரு ஆசிரியர் மாணவர்களை கண்காணிக்க வேண்டும்.
பள்ளிகளில் நடத்தப்படும் பரிசோதனையில் யாருக்காவது காய்ச்சல் இருந்தால் அது குறித்து யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளி கட்டாயம் என்பதால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்புகளை இரண்டாகப் பிரிக்க வேண்டியுள்ளது. எனவே, ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டால் அதே பள்ளியில் கீழ் நிலை வகுப்புகளில் உரிய கல்வித்தகுதியுடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களை பாடம் எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.
வைட்டமின் மாத்திரைகள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் மேற்கொள்ளப் பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சி யர் சிவன் அருள் நேற்று ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூர் அரசு பூங்கா நிதியுதவி பள்ளியில்மாணவர்களுக்காக மேற்கொள்ளப் பட்டுள்ள வசதிகளை ஆட்சியர் சிவன் அருள் நேற்று பார்வை யிட்டார். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பில் 18 ஆயிரம் மாணவர்களும், 12-ம் வகுப்பில் 12,880 மாணவர்கள் என மொத்தம் 30,880 மாணவர்கள்அரசு பொது தேர்வை எதிர்கொள்ள வுள்ளனர். பள்ளியில் சமூக இடைவெளியை பின்பற்றவும், மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப் பட்டுள்ளது.இது மட்டுமின்றி நாளை (இன்று) முதல் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் 10 நாட்களுக்கு தேவையான வைட்டமின் மாத்தி ரைகள் வழங்கவும் நடவடிக்கைஎடுத்துள்ளோம். அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட் டுள்ளன. இது குறித்த விளக்கங்கள் பள்ளியில் தெரிவிக்கப்படும்’’ என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிமேகலை, முனிமாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 539 பள்ளிகள் இன்று (19-ம் தேதி) திறக்கப்படவுள்ளன. இதையொட்டி, பள்ளிகள் மற்றும் வளா கங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. குடிநீர் தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் நிரப்பப் பட்டுள்ளன. வகுப்பறை கதவுகள் மற்றும் வளாக கதவுகள் ஆகியவற்றுக்கு கிரிமிநாசினி தெளிக்கப் பட்டுள்ளன. மேலும், தமிழக அரசு உத்தரவுபடி 62,987 மாணவர்களுக்கு சத்து மாத் திரைகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago