அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி

By செய்திப்பிரிவு

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் தை மாத தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையில் உள்ள தென் பெண்ணையாற்றில், தை மாதம் 5-ம் தேதி ஆற்றுத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அப்போது, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மற்றும் திருவண் ணாமலை மாவட்டங்களில் உள்ள கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தீர்த்தவாரி நடைபெறும். இதில், தி.மலையில் இருந்து தென்பெண்ணையாற்றுக்கு சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து அண்ணாமலையார் எழுந்தருளி காட்சிக் கொடுப்பார்.

இந்தாண்டு, கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, ஆற்றுத் திருவிழா மற்றும் தீர்த்தவாரிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், அண்ணாமலையாரின் தீர்த்தவாரி நடைபெறவில்லை. அதற்கு மாற்றாக, தென் பெண்ணையாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு, தி.மலைஅண்ணாமலையார் கோயிலில் உள்ள மகிழ மரம் முன்பு தீர்த்தவாரி நடைபெற்றது.

வேதமந்திரங்களை முழங்கி சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனை காண்பித்தனர். முன்னதாக, அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்