விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டம்

By செய்திப்பிரிவு

உயர் மின் கோபுரம் பிரச்சினைகள் குறித்த தீர்வுக்கான தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நடைபெற்றது.

சங்கத்தின் நிறுவனர் ஈசன் தலைமை வகித்தார். தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் முத்துவிசுவநாதன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஊத்துக்குளி ஒன்றிய நிர்வாகிகள், உயர்மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்படும் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்திய தந்தி சட்டத்தையும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் விருதுநகர் முதல் ஊத்துக்குளி வரையிலான 765 கிலோ வாட் திட்டத்தையும் ரத்து செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு, நீதிமன்றங்களில் முடிவு தெரியும் வரை திட்டப் பணிகளை எந்த வகையிலும் மேற்கொள்ளக்கூடாது. மேலும், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 13 உயர்மின் கோபுரங்கள் திட்டங்களுக்கு அரசாணை எண்:54 அடிப்படையில் இழப்பீடும், 100 சதவீத கருணைத் தொகையும், வாடகையும்தமிழக அரசு வழங்க வேண்டும்.மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்