அரசியல் லாபத்துக்காக திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் போராட்டம் நடத்துவதாக தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜ் கூறினார்.
தமாகா இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உதகையில் நேற்று நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் யுவராஜ் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-தமாகா கூட்டணி தொடரும். கடந்த 4 ஆண்டுகளில் புதிய மருத்துவக் கல்லூரிகள், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு, 200-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் தரம் உயர்வு, 4,000-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டது என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நீர் மேலாண்மையில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் மின் வெட்டோ, குடிநீர்த் தட்டுப்பாடோ இல்லை.
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், அரசியல் லாபத்துக்காக போராட்டங்களை நடத்துகின்றன. ஆனால், மக்கள் இவற்றை நம்பமாட்டார்கள். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். திமுக தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. சசிகலா சிறையிலிருந்து வந்த பின்னர், அதிமுகவுக்கோ, ஆட்சிக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago