ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் 2 வீடுகள் மற்றும் பள்ளியில் நடந்த திருட்டு தொடர்பாக, திருவாடானை போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அழியாதான்மொழி கிராமத்தைச் சேர்ந்த திலீப்குமார்(23), சூசைமாணிக்கம்(50) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து மடிக்கணினி, ரூ.36,000 ரொக்கம், மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். அதேபோல், கமுதி அருகே மேலவில்லனேந்தலைச் சேர்ந்த முத்து இருளாயி வீட்டில் 13 பவுன் நகைகளை திருடிய மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த பாண்டி பிரசாத் (30) என்பவரை கமுதி போலீஸார் கைது செய்து, நகைகளை மீட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago