ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப் புளி அருகே ராமகிருஷ்ண மடம் சார்பில் சுவாமி விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளிக் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராமத்தில் ராமகிருஷ்ண மடம் உள்ளது. இங்கு சுவாமி விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி, அடுத்த கல்வியாண்டு முதல் செயல்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் தலைமை வகித்தார். பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு நிதி வழங்கிய சென்னையைச் சேர்ந்த கே.பாலசுப்பிரமணி, மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுப்புலெட்சுமி, நாகாச்சி ஊராட்சித் தலைவர் ராணி, மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராஜீவ்காந்தி ஆகியோர் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றனர். விழாவில் 30 பெண்களுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago