சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. அவற்றை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பார்வை யிட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழையால் காளையார் கோவில் வட்டாரத்தில் பல பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதையடுத்து அமைச்சர் ஜி.பாஸ்கரன் காளையார்கோவில் அருகே பளுவூர், ஏரிவயல், சிலுக்கப்பட்டி, அல்லியூர், அஞ்சாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார்.
அப்போது, அஞ்சாம்பட்டியில் தொடர் மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற அமைச்சர் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளைப் பார்வையிட்டார். முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறிய ஊரக வளர்ச்சி அதிகாரிகளைக் கண்டித்தார்.
அவர் கூறுகையில், வீடு இடிந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு முடிந்ததும் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago