கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியில் நடந்த எருது விடும் விழாவைக் காண ஏராளமான மக்கள் திரண்டனர்.
தை பொங்கல் விழாவின்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடத்தப்படும். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் எருது விடும் விழா நடந்தது.
கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியில் பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் எருது விடும் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்க 400-க்கும் அதிகமான காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன.
கொம்பில் பதாகைகள் கட்டப்பட்ட நிலையில் துள்ளிக் குதித்து ஓடிய காளைகளை கண்டு ரசிக்க சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் திரண்டனர்.
எனவே, பாதுகாப்பு வழங்கவும், திருட்டு, கூட்ட நெரிசல் உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்தவும் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய போலீஸார் எருது விடும் விழா வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago