ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

By செய்திப்பிரிவு

ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் மற்றும் சின்னமாரியம்மன் கோயில் கும்பாபி ஷேகம் இன்று (18-ம் தேதி) நடக்கிறது.

ஈரோடு பெரியமாரியம்மன் வகையறாவைச் சேர்ந்த காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில், ரூ.50 லட்சம் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. பாரியூர் காளியம்மன் கோயிலைப் போல, காளிங்கராயன் வாய்க்காலில் நீராடி, பின்னர் குண்டம் இறங்கும் வகையில் கோயில் நிலை மாற்றப்பட்டது.

குண்டம் இறங்கும் பக்தர்களை காணும் வகையில் மூலவர் கருவறை அமைக்கப்பட்டது. இதேபோல் பொன்வீதியில் உள்ள சின்னமாரியம்மன் கோயிலில், புனரமைப்பு பணிகள் முடிந்ததை யொட்டி, இன்று காலை 10 மணிக்கு காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலிலும், அதனைத் தொடர்ந்து சின்னமாரியம்மன் கோயிலிலும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிஷேக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று, இரண்டாம் காலம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கலசம் நிறுவுதல், அஷ்ட பந்தனம் சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கையை கடை பிடிக்க வேண்டும் என, கோயில் நிர்வாகம் அறிவுறுத் தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்