திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ரங்கராஜன் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியது:
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை சரிசெய்ய வேண்டும். பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி பல்வேறு போராட் டங்களை நடத்தியது.
ஜாக்டோ-ஜியோ சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால், இன்னும் தீர்வு ஏற்படவில்லை. மாறாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது தமிழக அரசு 17பி ஒழுங்கு நட வடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகளை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படவில்லை. உடனடி யாக தமிழக அரசு ஜாக்டோ-ஜியோ போராட்டக் காலத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உட னடியாக ரத்து செய்ய வேண்டும். அதேபோல, 7-வது ஊதியக்குழு ஊதிய நிலுவை தொகையையும் வழங்க வேண்டும்.
எதிர்வரும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை உணர்ந்து, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளை அழைத்து பேசி, கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago