30 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் தி.மலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

By செய்திப்பிரிவு

ஆதிதிராவிடர் சமூகத்தினர் 30 சதவீத மானி யத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக் கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளா தாரம் மேம்பட, தாட்கோ மூலம் மானியத் துடன் வங்கிக் கடன் வழங்கப் படுகிறது. திட்டத் தொகையில் 30 சதவீதம் மானியம் அல்லது ரூ.2.25 லட்சம் மானியமாக வழங்கப் படும். பெண்களுக்கான வேளாண் நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாடு திட்டத்தின் கீழ் ஆழ்துளைக் கிணறு அமைத்தல், புதியகிணறு தோண்டுதல், நில மேம்பாடு செய்தல், தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் வாகன எரிபொருள் விற்பனை நிலையம்அமைத்தல், சுய வேலை வாய்ப்புத் திட்டத் தின் கீழ் மருத்துவம் மற்றும் சிகிச்சையகம் அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு மானியம் வழங்கப்படும். www.application. tahdco.com என்ற தாட்கோ இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் விண் ணப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்