கரோனா தடுப்பூசி போட வருவோரின் முன்பதிவு அடிப்படையில் கூடுதல் மையங்கள் விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தகவல்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி பணியை கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் கரோனா தடுப்பூசி பணியை தொடங்கி வைத்தார். முதன்முதலாக அரசு மருத்துவக்கல்லூரி அறுவை சிகிச்சை பணியாளர் பரமேஸ்வரன் (54) என்பவருக்கு தடுப் பூசி போடப்பட்டது.

பின்னர் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாபி சிங் செய்தியாளர்களிடம் கூறியது;

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 11, 688 பேர் முன்பதிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக மருத்துவ முன்களப் பணியாளர்களுக்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, விக்கிரவாண்டி, சிறுவந்தாடு வட்டார அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி பணி நடைபெறுகிறது. நான்கு இடங்களிலும் தலா 100 பேர் வீதம் தினமும் மாவட்டத்தில் 400 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதைத் தொடர்ந்து முன் பதிவு செய்பவர்களின் அடிப்படையில் கூடுதல் மையங்கள் திறக்கப்படும் என்றார்.

இந்நிகழ்வில், விழுப்புரம் மருத்து வக் கல்லூரி முதல்வர் குந்தவி தேவி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் சண்முக கனி, துணை இயக்குநர்செந்தில்குமார், மருத்துவ கண்காணிப் பாளர் புகழேந்தி, குடிமை மருத்துவர் சாந்தி உள்ளிட்ட மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சியில் கரோனா தடுப்பூசி

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக் குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தியாகதுருவம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் கிரணகுராலா நேற்று பார் வையிட்டார்.

தடுப்பூசி செலுத்திய மருத்துவர்கள் செவிலியர் மற்றும் மருத்துவப் பணி யாளர்கள் காத்திருப்பு அறையில் 30 நிமிடங்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், அவர்களிடம் ஏதேனும் எதிர்வினை ஏற்படுகிறதா? என்பதை கேட்டறிந்தார். பாதிப்பு எதுவும் இல்லை என்று தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆட்சியரிடம் தெரிவித் தனர்.

இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மருத் துவ கல்லூரி முதல்வர் ஆர்.முருகேசன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சதீஷ்குமார், கரோனா முதன்மை மருத்துவ கண்காணிப்பு அலுவலர் சிவக்குமார், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்