தோட்டக்கலை சாகுபடியில் விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக் கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தோட்டக்கலைப் பயிர்களை சிறந்த முறையில் தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டு சாகுபடி செய்துவரும் விவசாயிகளை ஊக்குவிக்க தமிழக அரசு வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் தலா 10 சாதனை யாளர்களுக்கு விருதுகளை வழங்க உள்ளது. அதன்படி, காய்கறி பயிர்கள் சாகுபடியில் சாதனையாளர் விருது, பழப்பயிர் கள் சாதனையாளர் விருது, சுவை தாளிதப் பயிர்கள் விருது, மூலிகை வாசனை திரவியப் பயிர்கள் விருது, மலைப் பயிர்கள் விருது, மலர்கள் விருது, நுண்ணீர்ப் பாசன தொழில்நுட்பத்துக்கான விருது, உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு விருது, அங்கக இயற்கை விவசாயத்துக்கான விருது, புதிய, தனித்துவம் மிக்க மாவட்டத்துக்கே சிறப்புக்குரிய தோட்டக்கலைப் பயிர் சாகுபடி சாதனையாளர் விருது என பத்து விருதுகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வசிக்கும், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் இதில் போட்டியிடலாம். ஒரு விவசாயி வட்டார அளவில் ஒரு விருதுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
எனவே www.tnhorticulture.tn.gov.in என்ற இணைய தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, கட்டணமாக, ரூ.100 செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago