வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, போகிப் பண்டிகை நாளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினர் சார்பில் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடத்தியதற்காக 14 பேர் மீது அவிநாசி போலீஸார் வழக்கு பதிவு செய்ததற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ஆர். குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எட்டு வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது, விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பது, எண்ணெய் குழாய் அமைப்பது போன்ற பல்வேறு விவசாய விரோத நடவடிக்கையை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. போகிப் பண்டிகை நாளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்கள், புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 14 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதற்காக வழக்கு பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதனை மாவட்ட காவல் துறை திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago