தமிழ்நாடு நெசவுத் தொழில்முனைவோர் அமைப்பின் (TTE) பல்லடம் பகுதியை சேர்ந்த நிர்வாகிகளான முருகேஷ், சந்திரசேகர், பழனிச்சாமி, பிரகாஷ் மற்றும் இதர நெசவாளர் அமைப்பின் நிர்வாகிகள், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனிடம் அளித்த புகார் மனு:
ஜவுளித் தொழில் நலிவடைந்து வரும் நிலையில் ரயான் பஞ்சு இழை (VSF) மற்றும் ரயான் நூலுக்கு (VSY) கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த கூடுதல் வரி விதிப்பால், நூல் விலை அதிகரித்து, உற்பத்திச் செலவும் அதிகரிக்கும். விலை அதிகரிப்பால் நலிந்து வரும் விசைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்கள் சம்பந்தப்பட்ட தொழில்கள் நடத்த முடியாத சூழல் ஏற்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர். இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்து, விசைத்தறி மற்றும் ஜவுளி சம்பந்தப்பட்ட தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வானதி சீனிவாசன் உறுதி அளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago