திருப்பூர் மாநகராட்சி 36-வது வார்டு முத்தணம்பாளையம் அருகே உள்ள பாலாஜி நகர், குருவாயூரப்பன் நகர் மற்றும் கோடீஸ்வரன் நகர் பொதுமக்கள் கூறியதாவது:
எங்கள் பகுதியில் சாலை, தெருவிளக்கு, குப்பைத் தொட்டி, குடிநீர் குழாய் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இதுதொடர்பாக ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே குண்டும் குழியுமான சாலையில் தேங்கிய மழைநீரில் காகிதக் கப்பல் விடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
எங்கள் பகுதியில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும். நீண்ட நாட்களாக எங்கள் பகுதி சாலை மிகவும் மோசமாக இருப்பதால், தற்போது பெய்த மழைக்கு சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது.
இதனால் வாகனங்களை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே எங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நூதன போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago