கரோனா பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் குவிந்த இளைஞர்கள்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கரோனா பரிசோதனைக்காக திரண்டனர்.

கோவையில் வரும் 19-ம் தேதி முதல் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள இளைஞர்கள் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள நேற்று குவிந்தனர்.

கல்லூரி மாணவர்கள் சிலர் பொங்கல் விடுமுறைக்காக சொந்த கிராமத்துக்கு வந்த நிலையில் மீண்டும் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்றால் கரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சில கல்லூரி நிர்வாகங்கள் அறிவுறுத்தி இருந்தன. இந்நிலையில் சென்னை, கோவை போன்ற வெளியூர்களில் பயிலும் கல்லூரி மாணவர்களும் தங்களை கரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர். பொங்கல் விடுமுறை என்பதால் மருத்துவமனை பணியாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்ற நிலையில், குறைந்த அளவிலான மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு கரோனா பரிசோதனையை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்