ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் 12 மையங்களில் கரோனா தடுப்பூசி மருந்து இன்று முதல் செலுத்தப்படவுள்ளது.
இந்தியா முழுவதும் கரோனா தொற்றுக்கு சுமார் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா நோய் தொற்றால் நாடு முழுவதும் இதுவரை 1.50 லட்சம் பேர் உயிரி ழந்துள்ளனர். இதற்கான நோய் தடுப்பு மருந்துகள் கண்டறிய உலக நாடுகள் பெரும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவிலும் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனம்மூலம் ‘கோவாக்சின்’ மற்றும் ‘கோவிஷீல்டு’ என்ற நோய் தடுப்புமருந்துகள் கண்ட றியப்பட்டுள்ளன. மத்திய அரசின் வழிகாட்டு நெறி முறைகளுடன் கரோனா நோய் தடுப்பு மருந்துகள் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கரோனா நோய் தடுப்பு மருந்துகள் நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி (இன்று) முதல் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, கரோனா தடுப்பூசிகள் இன்று முதற்கட்டமாக விநியோகிக்கப்படவுள்ளன.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 42,100 டோஸ் மருந்துகள் மாநில சுகாதாரத்துறை மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், வேலூர் மாவட்டத்துக்கு 18,600 டோஸ், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 4,700 டோஸ், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 4,400 டோஸ், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 14,400 டோஸ் மருந்துகள் ஏற்கெனவே பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, முதற் கட்டமாக மருத்துவர்கள், செவி லியர்கள், முன்களப்பணியாளர் களுக்கு கரோனா தடுப்பூசிகள் இன்று வழங்கப்படவுள்ளன. இதற் கான ஏற்பாடுகளை மாவட்ட சுகா தாரத்துறையினர் செய்து வருகின் றனர். ஒருகிணைந்த வேலூர் மாவட் டத்தில் மொத்தம் 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மையத் தில் 100 பேர் வீதம் 12 மையங் களில் மொத்தம் 1,200 பேருக்கு இன்று தடுப்பூசிகள் செலுத்தப்பட வுள்ளன.
இது குறித்து வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, "ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஜனவரி 16-ம் தேதி (இன்று) கரோனாவுக் கான தடுப்பூசி மருந்துகள் வழங் கப்படவுள்ளன. வேலூர் மாவட் டத்தில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, பென்ட் லென்ட் அரசு மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 4 மையங்களில் கரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் அரசு மருத்துவமனைகள், மாதனூர் கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என 5 மையங்களில் கரோனா தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படவுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாலாஜா, அரக்கோணம் அரசு மருத்துவமனை உட்பட 3 மையங்களில் கரோனா தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படவுள்ளன.
ஒவ்வொரு மையத்திலும் தலா 100 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
முதல் டோஸில் எந்த தடுப்பூசி மருந்து வழங்கப்படுகிறதோ, அதே டோஸ் 2-வது முறையும் வழங்க வேண்டும். தடுப்பூசி மாற்றி போடக் கூடாது என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப் பூசிகள் போடுவதற்கான மருத்து வர்கள், செவிலியர்களுக்கு பிரத் யேக பயிற்சிகள் அளிக்கப்பட்டுள் ளன. 2-ம் கட்ட டோஸ் தடுப்பூசிகள் 28 நாட்கள் கழித்து செலுத்தப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி மருந்துகள் குளிர்பதனக் கிடங்குளில் பாது காப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி மருந்து தினசரி வழங்கப்படாது. வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு மட்டுமே செலுத்தப்படும். ஜனவரி 16-ம் தேதி, முதல் நாள் என்பதால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 12 மையங்களில் கரோனா தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. படிப்படியாக தடுப்பூசி போடும் மையங்கள் அதிகரிக்கப்படும்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப் பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் இம்மாதம் இறுதிக்குள் 27,700 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதல் நாள் (இன்று) தடுப்பூசி மருந்து செலுத்தும் நிகழ்ச்சியில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்’’ என்றார்.
இதற்கிடையே, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி மருந்து செலுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தடுப்பூசி மருந்து செலுத்துவற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமை மருத்துவர் திலீபனிடம் ஆலோசனை நடத்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago